Filter
Exclude
Time range
-
Near
TNTVNewsTamil
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?! சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும், தேவையான இடங்களில் விமர்சித்தும் வந்த தனது பத்திரிகைப் பயணத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் சிறப்புக் கட்டுரை. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-naam…
16
TNTVNewsTamil
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?! சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும், தேவையான இடங்களில் விமர்சித்தும் வந்த தனது பத்திரிகைப் பயணத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் சிறப்புக் கட்டுரை. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-naam…
4
5
14
874
TNTVNewsTamil
தோற்பது தமிழ்த் தேசியமா ? இல்லை நாம் தமிழர் கட்சியா ?! தேர்தல் முடிவுகளைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம், திராவிட அரசியல், நாம் தமிழர் கட்சியின் பயணம் மற்றும் தமிழர் அடையாளம் குறித்து வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய ஆழமான பகுப்பாய்வு. முழுவதும் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/thorpathu-t…
2
5
11
3,511
TNTVNewsTamil
தமிழ்ச் சமூகமே... வணங்குவோம் இப்பெரியாரை ! சிந்துவெளி நாகரிகம் என்பது முற்றிலும் தமிழர் நாகரிகம் என்றும், அங்கு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் உள்ளவை தமிழ் எழுத்துக்களே என்றும் உலகிற்கு ஆணித்தரமாக முன்வைத்த ஆய்வாளர் பேராசிரியர் இரா. மதிவாணன் ஐயாவின் 90 வது அகவை நாள் இன்று - ஜூலை 1 100 ஆண்டுகள் கடந்தும் தமிழ் போல் எல்லா நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வாங்கு வாழ தமிழியல் நடுவமும், தமிழ் ஊடகமும் வணங்கி வாழ்த்துகிறது. - வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் ஆசிரியர் - தமிழ் ஊடகம் நிறுவனர் - தமிழியல் நடுவம் 01/07/26 (பதிவு AI மூலம் உருவாக்கப்பட்டது. சிறு எழுத்துப் பிழை இருக்கலாம்)
1
11
23
523
TNTVNewsTamil
சீமான் இடைத்தேர்தல் போட்டி: வெற்றியா? அரசியல் தற்கொலையா? இடைத் தேர்தலில் சீமான் போட்டியிடுவது அரசியல் ரீதியாக சரியான முடிவா? நீதிக்கட்சி வரலாறு, திராவிட இயக்கத்தின் உருவாக்கம், தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் தற்போதைய தேர்தல் சூழல் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய சிறப்புக் கட்டுரையின் முதல் பகுதி. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/seeman-bypo… ========================== தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ==========================
1
9
19
759
TNTVNewsTamil
இடைத் தேர்தலில் சீமான் போட்டியா ?! தற்கொ*லை செய்துகொள்ள சீமானுக்கு முழு உரிமை உண்டு தமிழர்களைப் படுகொ*லை செய்ய அவருக்கு ஏது உரிமை ?! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதும் சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு - பகுதி 1 : இன்று மாலை tamiloodagam.com இணைய வலை தளத்தில்... வாசிக்கத் தவறாதீர்கள். ========================== தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ==========================
1
3
5
214
TNTVNewsTamil
தடுமாறுகிறாரா சீமான் ? நல்வாய்ப்பை நழுவவிடுகிறதா நாம் தமிழர் கட்சி !? -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆளும் கட்சியினர் - எதிர்க் கட்சியினர் இடையையேயான நல்லுறவு என்பது குறித்துத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கவேயில்லை. புதுடெல்லியில் காங்கிரஸ் Vs பாஜக என இரு எதிரெதிர்க் கட்சிகள் செயல்பட்டபோதும் இரு கட்சியினரிடையில் குறிப்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் இடையே தமிழ்நாட்டில் உள்ளது போல வெறுப்புணர்ச்சியும், வெறுப்புப் பேச்சுகளும் இருப்பதில்லை. அரசியல் தாண்டிய அவர்களின் நல்லுறவும், நாகரிக நட்பும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. போட்டி இருக்கும் ஆனால் வெறுப்பும், கசப்புணர்வும் பெரும்பாலும் இருக்காது. ஆனால் தமிழ்நாட்டில் திரைப்பட இரசிகர்கள் தொடங்கி அரசியல் தொண்டர்கள் வரை "இரு தரப்பு வெறுப்புணர்வு" திட்டமிட்டுப் பரப்பப்பட்டு தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. எம்ஜிஆர் Vs சிவாஜி, ரஜினி Vs கமல், அஜித் Vs விஜய் என திரைத்துறையிலும்...அரசியல் துறையில் எம்ஜிஆர் Vs கருணாநிதி, கருணாநிதி Vs ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின் என்று இரு தரப்பாகப் பிரித்து வைக்கப்பட்டு வெறுப்புணர்வு எனும் தீ எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது. இவை இயற்கையான வெறுப்புணர்வு அல்ல, இரு தரப்பினருக்கும் தங்களின் இரசிகர்களை, தொண்டர்களை இப்படி இரு கூறுகளாகப் பிரித்து வைத்து அதன் மூலம் புகழ், விளம்பரம், பதவி, அதிகாரம், பணம் ஈட்ட இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. உண்மையில், நடைமுறையில் இரு தரப்பு நடிகர்களுக்கும், இரு தரப்பு தலைவர்களுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கும், வெளியே தெரியாத உறவு இருக்கும். ஆனால் அந்தப் புரிதல் இரசிகர்களுக்கோ, தொண்டர்களுக்கோ தெரியாது. அப்படிப் புரியாமல் அவர்கள் இருதரப்பும் மோதிக் கொண்டால்தான் தலைவர்களுக்குப் பெயர், புகழ் கிடைக்கும் மக்களிடம் அதிக அளவில் தங்களின் பெயர் சென்று சேரும். இது ஒரு "மார்க்கெட்டிங்" விளம்பர உத்திதான். இத்தனை ஆண்டுகள் கழித்து ரஜினி - கமல் இணைந்து நடித்துப் பணம் ஈட்டப்போகிறார்கள் இல்லையா, அதுபோலத்தான். இத்தனை ஆண்டுகள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்ட இரு நடிகர்களின் இரசிகர்கள்தான் ஏமாளிகள். விஜய் வந்தவுடன் இத்தனை ஆண்டுகள் கீரியும் பாம்பும் போல அடித்துக்கொண்ட அதிமுக - திமுக ஒன்று சேர ஆயத்தமானர்கள் இல்லையா...அப்படியானால், இருத்தரப்பிலும் மோதி, பாதிக்கப்பட்ட, வழக்கு வாங்கி சிறை சென்ற தொண்டர்களின் கதி ?! எந்த ஆட்சி வந்தாலும் இரு கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய (மது) ஆலைகளில்தான் தமிழ்நாடு அரசு மது வாங்குகிறது இல்லையா...அது போலத்தான். இப்படிப் பிரித்தாளப்படும் இரு தரப்பு இரசிகர்களும், தொண்டர்களும்தான் தங்களின் தலைவர்களை, நடிகர்களை மக்களிடம் வேக வேகமாகக் கொண்டு செல்வார்கள். இப்படிப்பட்ட இரட்டை மனநிலைக்கு ஆட்பட்ட மக்களிடம் இரண்டு தரப்பு நடிகர்களும், தலைவர்களும் இறுதி வரை வெளியே நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாகத் தனது கனவு நடிகன் என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவான் இரசிகன், தனது தலைவன் என்ன குற்றம் செய்தாலும் அதை நியாயப்படுத்துவான் தொண்டன். மனித அடிமைகளை இரண்டு போட்டியாளர் குழுக்களாகப் பிரித்து அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து மோதிக்கொள்ள வைத்து அதை மது அருந்திக்கொண்டே வேடிக்கை பார்க்கும் கொடுங்கோலன் மன நிலைதான் இது. இந்த அரசியல் புரியாதவரை மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள். இப்படிப்பட்ட மலிவான 'அரசியல் நாகரிகத்தைத்' தமிழ்நாட்டில் விதைத்தவர்கள் 'திராவிட முகமூடி' அரசியல்வாதிகள்தான். இந்த மலிவான அரசியல் போக்கை மாற்ற விரும்பும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுதலுக்குரியவர். இயக்குநர் கவுதமன் இல்லத் திருமண நிகழ்வில் நேற்று (25/6/26) மாலையில் இருந்து இன்று (25/6/26) மதியம் வரை திருமண இல்லத்தில் இருந்து தமது குடும்ப நிகழ்வு போல முன்னின்று நடத்தியிருக்கிறார் சீமான். அங்கே வைகோ வந்து இருந்தது சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே, மு.க.ஸ்டாலின் வந்து சென்றது சுமார் 15 நிமிடங்கள். ஆனால் சீமான் அங்கு நின்றது சுமார் 18 மணி நேரம். அப்போது அங்கே வந்த இரு தலைவர்களிடமும் கை குலுக்கிப் பேசி வரவேற்றது கவுதமன் சார்பாக ஒரு குடும்ப மூத்த உறுப்பினர் போலத்தானே தவிர அதனையும் அரசியலாகப் பார்ப்பது நாம் மேலே சொன்ன இரசிகன், தொண்டன் மன நிலைதான். உண்மையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு ? ஒரே ஒரு "அ" எனும் எழுத்து மட்டும்தான்.
5
10
41
2,990
TNTVNewsTamil
அருவருப்பு, ஆபாச முக்தார் நல்லவர் ! வன்னியரசு - திலகவதி பற்றிப் பேசுவோர் மட்டும் கெட்டவரா !? தீப்பொறி ஆறுமுகம் தொடங்கி ஆபாச முக்தார் வரை ! திமுகவின் தொடரும் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" !! --வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் ஒரு பள்ளிக்கூட அறையில் எல்லோரும் சத்தம் போடாம இருங்க என்றால் அங்கே சத்தம் போட்டிருக்கிறார்கள் என்று பொருள். அதனால்தான் அறிஞர் அண்ணா தனது திமுக தொண்டர்களிடம் இருந்திராத "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" ஆகியவற்றின் பெயரால் ஒரு ஒழுங்கு விதியை முன்வைத்தார். ஆனால் நடைமுறையில் கடமை என்றால் காசு பார்ப்பது, கண்ணியம் என்றால் பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்த்துக் கேவலமாகப் பேசுவது, கட்டுப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது ஆகியவைதான் அண்ணாவுக்குப் பிறகு நாம் பார்த்து ஏமாந்த அந்த "தி மற்றும் திமு கழகங்களின்" முழக்கத்தின் பொருளாக இருக்கிறது. பெரியார் இராமசாமி வாழ்க, திமுக வாழ்க என்று ஒருவர் சொல்லிவிட்டால் அவர் நல்லவர், அவர் அறிவாளி, அவர் பகுத்தறிவுவாதி, சனாதன எதிர்ப்பாளர். அதே மனிதர் திமுக செய்த இந்தச் செயல்கள் தவறு, இராமசாமியின் இந்தப் பேச்சு தவறு என்று கூறிவிட்டாலோ, கூட்டணியை விட்டு வெளியே சென்றுவிட்டாலோ அவர் "சனாதனப் பார்ப்பன சங்கி, பாஜக பி டீம், பெண்கள் தொடர்பான தவறான செயல் செய்பவர், பாலியல் பொறுக்கி....." இப்படி ஒரு பட்டியலையே வாசித்து முடித்துவிட்டுதான் ஓய்வார்கள் இந்த உடன்பிறப்புகள். இது இரண்டு மூன்று தலைமுறையாக இவர்களுக்குள் ஊறிப்போன ஒரு மரபணு வியாதி. இந்தப் புத்தி எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் பெரியார் இராமசாமியின் குணம் அப்படியே தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல வருகிறது. பொருந்தாத "கிழமணம்" புரிந்த பெரியார் இராமசாமியின் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறோம், அதேபோல திகவுக்கு தன்னைத் தலைவராக ஆக்கிவிட்டு கல்லாப்பெட்டி சாவியை மணியம்மையிடம் கொடுத்து விட்டார் இராமசாமி என்பதாலும் திகவில் இருந்து வெளியேறினார்கள் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும். அப்போது அவர்களை வசை பாடி இராமசாமி எழுதிய எழுத்துக்களும், இராமசாமியைக் கேவலமாக அண்ணாவும், கருணாநிதியும் எழுதிய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் படித்தாலோ, கேட்டாலோ வாந்தி வரும். ஆக, திராவிட முகமூடித் தலைவர்களின் "கண்ணியம்" என்பது இப்படித்தான் இருந்தது. அவர்களின் வாரிசுகள் மட்டும் எப்படி இருப்பார்கள் ? கண்ணியமான, கலை நயத்தோடு, உடல், மனம் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய தமிழர் கலையான கரகாட்டத்தை ஆபாச இரட்டை அர்த்தம் பேசும் தரம்கெட்ட ஒரு "ரெக்கார்ட் டான்ஸ்" ஆக மாற்றிய கண்ணியவான்கள் அல்லவா இந்தத் திராவிட முகமூடிகள் ?! "சிவனடியார்" என்பது போல இருந்த "தேவர் அடியார்" எனும் உயர் சொற்களை ஆபாச நடனம் ஆடும் "அழகிகள்" நடனமாக மாற்றி, பொட்டுக்கட்டும் வழக்கத்தைத் தேவர் அடியார் எனும் புனிதமான, இறைவரின் அடியார் எனும் மேன்மை கொண்ட ஒரு இறைப்பணி மீது திணித்து அதனைப் பாலியல் தொழிலாக மாற்றிய பரம்பரை அல்லவா இந்தத் திராவிட முகமூடிகளின் பரம்பரை !? தமிழர் அல்லாதவர்களின் தீய பழக்கங்கள் இங்கே தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு அடிப்படை வாசலே திராவிட முகமூடி அணிந்தவர்கள்தானே ! பிறகு அவர்களிடம் தமிழர்களின் அறம் எங்கே இருக்கும் ?! பிராமணர்கள் / பார்ப்பனர்கள் /காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பதற்காக, அவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏழை, எளிய அப்பாவித் தமிழர்களை ஈர்ப்பதற்காக ஆபாச, அருவருப்பு பேச்சுக்களை அரசியல் மேடைகளில் அரங்கேற்றம் செய்தவர்களும் இவர்களே. அன்று காங்கிரஸ்காரர்களை "சனாதன பார்ப்பன சங்கி, பாஜக பி டீம், பெண்கள் தொடர்பான தவறான செயல் செய்பவர், பாலியல் பொறுக்கி....."என்று மேடை தோறும் பேசிய திராவிடத் திருவாளர்கள் அந்தக் காங்கிரஸ் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டவுடன், இந்த முழக்க வசனத்தை பாஜக பக்கம் திருப்பினார்கள். திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் காங்கிரஸ் கட்சி "நட்ட நடுநிலை, சாதி மதம் ஒழித்த, மதச்சார்பற்ற" கட்சியாக "ஞானஸ்னானம்" பெற்றுவிட்டது. கடந்த 1999 ம் ஆண்டு பாஜகவுக்கும் "ஞானஸ்னானம்" செய்து வைத்து அந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்து ஐந்தாண்டுகள் இந்திய அமைச்சர் பதவிகள் வாங்கி சுகித்தது திமுக. ஆக, பாஜவுடனும் கூட்டணி வைத்தாயிற்று, காங்கிரஸோடும் கூட்டணி வைத்தாயிற்று பிறகு யாரை அப்படி வசை பாடுவது ? இருக்கவே இருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதனையும் வசை பாடுவோம் அவ்வளவுதானே !? ஒருவேளை அந்தக் கட்சியும் தங்களுடன் கூட்டணி சேர்ந்தால் அதற்கும் "ஞானஸ்னானம்" செய்து வைத்துவிடுவோம் அவ்வளவுதான். இதுதான் திராவிட முகமூடிகளின் விவசாயம். 1/2...
1
16
20
364
TNTVNewsTamil
செய்தியாசிரியர் பெரியசாமி அவர்களுக்குத் தமிழ் ஊடகத்தின் புகழஞ்சலி ! தமிழ்நாடு பத்திரிகை ஊடக உலகின் அறிவார்ந்த செய்தி ஆசிரியர்களில் தலையாயவர் அவர். பெரியசாமி சர் என்றுதான் அவரை அனைவரும் அன்போடு அழைப்போம். தனது மனைவி, குழந்தைகள் தொடங்கி எல்லோரையும் "வாங்க போங்க" என்று அழைக்கும் வழக்கம் கொண்டவர். சுமார் ஆறு ஆண்டுகள் அவரோடு பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு கடுஞ்சொல் கூட அவரது வாயில் இருந்து வந்ததை நான் கேட்டதேயில்லை. அவரோடு மணிக்கணக்கில் பேசினாலும் கூட சலிப்புத் தட்டாது. அவ்வளவு சுவையாகப் பேசக்கூடியவர். செய்தித் துறையில் எம்மை வார்த்தெடுத்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் என்பதை விட எமது வீட்டின் மூத்தவர் போல நட்புறவிலும் இருந்தவர். கடும் கோபம் கொண்டு சண்டை போட்டு சில நாட்கள் பேசாமல் இருப்பார். பிறகு அப்படியொன்று நடந்ததே தெரியாமல் மீண்டும் பேசுவார். அவரது காலத்தில் அலைபேசி கிடையாது, இணையதளம் கிடையாது. ஆனால் அவர் ஒவ்வொரு நாடு குறித்தும், பெரு நகரங்கள் குறித்தும் பேசும்போதெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு நாம் கேட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு அத்தனை தகவல்களையும் நாக்கு நுனியில் வைத்திருப்பார். அவர் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். பல நேரங்களில் அவர் கோபமாகப் பேசுவது போலத் தோன்றும், ஆனால் அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும் அத்தனையும் நகைச்சுவை என்று. செய்திகளை தட்டச்சு செய்யமாட்டார். அவர் செய்திகளைச் சொல்லச் சொல்ல அதைத் தட்டச்சு செய்பவர் கேட்டு தட்டச்சு செய்வார். அப்படி அவர் செய்தி சொல்வது செய்தி அறை மட்டுமல்ல பக்கத்துக்கு அறைகளுக்கும் கேட்கும் அளவுக்கு சத்தமாக செய்திகளைச் சொல்வார். அதைக் கேட்கக் கேட்க செய்தி எழுதத் தெரியாதவர் கூட கற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்கும் அவரின் அந்தச் செய்தி சொல்லும் திறன். அவர் சென்னைக்கு வந்து பத்திரிகை உலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து சன் நியூஸ் செய்திப்பிரிவில் பணியாற்றி அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சிக்கு வந்த காலம் வரை நடைபெற்ற அவரது அனுபவங்களையெல்லாம் அவர் சொல்லும் விதமே கேட்பதற்கு மிகச் சுவையானதாக இருக்கும். மிக முக்கியமான செய்திகள் எல்லாம் இவரிடமே ஒப்படைக்கப்படும் அளவுக்கு அனுபவம், துல்லியம், பிழைகள் வராமல் செய்தி தருவது என்பதில் உணமையில் பெரியசாமி சர் ஒரு பல்கலைக் கழகம். தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவோர் மட்டுமே செய்தி ஆசிரியர்கள், செய்தி ஆளுமைகள் என்கிற மிகத் தவறான ஒரு புரிதல் மற்றும் நடைமுறை வந்த காலத்திற்குப் பிறகு பெரியசாமி சர் போன்ற செய்திப் பிதா மகன்களின் பெருமை இந்த உலகிற்குத் தெரியாமலேயே போயிற்று. இன்றைய செய்தித் தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு குறைந்தது 10 பிழைகள், தவறுகள் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் ஒரு Factual Error கூட இல்லாதிருக்கும் இவர் பொறுப்பு வகிக்கும் அந்த 8 மணி நேர shift. எமது முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார். ஆறுதலாக இருந்தார். இறுதிக் காலங்களில் தொடர்பற்றுப் போயிருந்தாலும் அவரது மற்றும் எமது கனவான தனி வார இதழ், மின்னணு ஊடகம் (Digital Media) என்று இன்றைய தமிழ் ஊடகத்தின் எமது வளர்ச்சிக்கு வித்தாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். பெரியசாமி சர் அவர்களின் இழப்பு செய்தித்துறைக்கே பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறது தமிழ் ஊடகம் குழுமம். -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம். தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம். 23/06/26 இணைய வலைதளம் : tamiloodagam.com #tribute #periyasamisir #news #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
5
7
194
TNTVNewsTamil
ஈ*ழத் தமிழர் மீது ஹிந்து என்.ராம் வகையறாக்களுக்குத் திடீர் பாசம் பொங்குவது ஏன் ? பின்னணி என்ன ?! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்த மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும், மஹிந்த ராஜபக்சவால் இலங்கையின் உயரிய விருதான (இந்தியாவின் பாரத் ரத்னா போல) "லங்கா ரத்னா" விருதும் அளிக்கப்பட்டவர்தான் ஹிந்து என்.ராம். இவர் ஹிந்து நாளிதழ் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர். அதே ஹிந்து நிறுவனத்தால் நடத்தப்படும் ஹிந்து இதழ் மற்றும் பிரன்ட்லைன் இதழில் பணியாற்றுபவர் ஆர்.கே. என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், ஹிந்து என்.ராமின் விசுவாசத்துக்குரிய ஒரு பத்திரிகையாளர், தாய் மொழி மலையாளம். இலங்கை வடக்கு கிழக்கில் போர் நடைபெற்ற காலங்களில் சில ஆண்டுகள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவால் அளிக்கப்பட்ட "சகல சவுகரியங்களோடும், வசதிகளோடும்" கொழும்புவில் தங்கியிருந்து இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டு வந்தவர்தான் ஆர்.கே. எனும் ராதாகிருஷ்ணன். விடுதலைப் போராட்ட (மேதகு) இயக்கம் குறித்த பல தவறான செய்திகளை வெளியிட்டவரும் இவரே. இந்தியாவில் இருந்த காலகட்டங்களில் தமிழ்நாட்டில் திமுக, அறிவாலயம் தொடர்பான செய்திகளை ஹிந்து நாளிதழுக்காக சேகரித்து வெளியிட்டு வந்தவர். இந்த ஆர்.கேதான் இந்தியாவில் வாழும் ஈ*ழத் தமிழர் குறித்து ஒரு ஆவணப்படம் எடுத்து அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். சரி...நம்முடைய அடிப்படைக் கேள்வி இதுதான். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ஹிந்து என்.ராம் வகையறாக்களுக்கு ஈ*ழத் தமிழர் அகதிகள் மீது திடீர் பாசம் பொங்குவதற்கு என்ன காரணம் ?! என்பதுதான் அந்தக் கேள்வி. இலங்கை வாழ்த் தமிழர்கள் மீதான சிங்கள பவுத்த இனவெறித் தாக்குதல்கள் 1977, 1983, 2009 ஆகிய ஆண்டுகளில் மிக உக்கிரமாகக் கொ*லைவெறியுடன் நடந்தேறின. பல காலகட்டங்களில் 100-க்கணக்கான் ஆயிரக்கணக்கான ஈ*ழத் தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சமடைந்தனர். குறிப்பாக முகாம்களில் வாழும் தமிழர்கள் இங்கே வந்து சில பத்தாண்டுகள் ஆகின்றன. இதுவரை அவர்கள் குறித்து எந்த அக்கறையும் கொண்டிராத தி ஹிந்து - பிரன்ட்லைன் ஆசிரியர்களுக்கு இப்போது என்ன திடீர் அக்கறை அவர்கள் மீது ?! அதிலும் ஹிந்து என்.ராம், மு.க.ஸ்டாலினின் "வாக்கிங் நண்பர்". அன்றாடம் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி போகும்போது உடன் சென்று நிழற்படம் எடுப்பவர். அந்த அளவுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கம். அப்போதெல்லாம் ஸ்டாலினிடம் ஈ*ழத் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறி திமுக ஆட்சியின்போதே முகமற்ற அவர்களுக்கு "முகம்" பெற்றுக் கொடுத்திருக்கலாமே ஹிந்து ராமும், ஆர்.கேவும் ?! அதுவும் ஆட்சி போன காலத்தில் மு.க.ஸ்டாலினை அழைத்து இந்தப் படத்தைக் காண்பிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது ? அடிப்படையில் ஹிந்து என்.ராமும், ஆர்.கேவும் "கரை" வேட்டி கட்டாத திமுககாரர்கள் என்பது உலகறிந்த ஒன்று. அப்படியிருக்க எதற்காக இப்போது இந்த வேலை ?! இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது மிக நுட்பமான தமிழர் இனவ*ழிப்பு அரசியல். இலங்கையில் மஹிந்த ராஜபக்ச அதிபர். இவரது சகோதரர்கள் கோத்தபய ராஜபக்ச பிரதமர் (ஒருமுறை அதிபராகவும் இருந்தார்), பசில் ராஜபக்ச நிதி அமைச்சர், சமல் ராஜபக்ச வேளாண் துறை அமைச்சர், மகன்கள் நாமல் ராஜபக்ச விளையாட்டுத் துறை அமைச்சர், யோஷித ராஜபக்ச பிரதமரின் தலைமை அதிகாரி என ராஜபக்ச குடும்பத்தினரே இலங்கையை ஆட்டிப்படைத்து வந்தனர். தமிழர் மீதான இனவெறியை எரிபொருள் ஊற்றி ஊற்றி வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டு ஒட்டுமொத்த இலங்கை அரசின் கஜானா - பெட்டகத்தைத் தங்கள் சொந்த சொத்து - பணமாக மாற்றிக் கொண்டு விட்டனர் இந்தக் குடும்பத்தினர். நாடே பொருளாதாரத்தில் நசிந்து பெரும் நெருக்கடிக்கு ஆளானது. இதனால் கடந்த 2022 ம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. குடும்பத்தோடு வெளி நாட்டிற்குத் தப்பி ஓடினார் மஹிந்த ராஜபக்ச. அதன்பிறகு கடைசியாக நடைபெற்ற தேர்தலில் அனுர குமார திசாநாயகே அதிபர் ஆனார். இலங்கை நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2029 ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இப்போதிருந்தே மகன் நாமல் ராஜபக்சவை முன்னிலைப் படுத்தி அவரை அடுத்த அதிபர் ஆக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார் மஹிந்த ராஜபக்ச. சிங்கள பவுத்த பேரினவாதத்தை முன்னிலைப்படுத்தி அதில் குளிர்காய்ந்து அரசியல் செய்து போர்க்குற்றம் மற்றும் இனவ*ழிப்பு செய்த மஹிந்தவுக்கு இடையூறாக இருப்பது தமிழர்களின் எழுச்சி.
2
30
29
505
TNTVNewsTamil
அரசியல் கட்சிகள் சாராத பத்திரிகை ஊடகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் திமுகவின் கூடாரமாகிப் போய்விட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார், அவரும் வருகை தர ஒப்புக்கொண்டார் எனும் தகவல் கிடைத்தது. 01. அமைச்சரை அழைத்து நடத்தும் அளவுக்கு அது பெரிய நிகழ்வா என்றால் இல்லை. மொத்தமே 10 - 15 பேர் அதிலும் பெற்றோரே அதிகம் கலந்து கொள்ளும் ஒரு மிகச்சிறு நிகழ்வு அது. தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான மாணவ மணிகள் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் பத்திரிகையாளர்களின் வெறும் 10 - 15 மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுக்க அமைச்சரை அழைப்பது அழகல்ல. 02. அமைச்சருக்கு ஒருபுறம் அழைப்பு விடுத்துவிட்டு மறுபுறம் ஆபாச அருவருப்பு யூடியூபர் முக்தார் மீதான தவெக அரசின் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டதுடன், முக்தாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் ஹாசிப் ஆகியோர். 03. தற்போதைய சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் முழுக்க முழுக்க திமுக ஆதரவாளர்கள் என்பது மட்டுமல்ல கடந்த திமுக ஆட்சியில் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுபவர் மீதெல்லாம் காவல்துறையை வைத்து அடக்குமுறை மேற்கொண்டு பொய் வழக்குத் தொடுத்தவர்கள். 04. மன்றத்தின் இன்றைய நிர்வாகிகளின் கூட்டாளியாக உள்ள நக்கீரன் கோபால், திரு.ஜோசப் விஜய் அவர்கள் ஒரு இறப்பு நிகழ்வுக்கு சென்றபோது "விஜய் போதையில் இருந்தார்" என்று அபாண்டமாக கூசாமல் அவதூறு பரப்பியவர். அப்போது இந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் எவரும் கோபாலைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. 05. தவெக குறித்தும், திரு.விஜய் குறித்தும் திமுக ஆதரவு பத்திரிகை ஊடகங்கள் அவதூறு பரப்பியபோது கள்ள மவுனம் காத்தனர் இந்த நிர்வாகிகள். எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்தும் இல்லாது, சுதந்திரமாகச் செயல்படவேண்டிய - கட்சி சாராத பத்திரிகை ஊடகர்களால் நடத்தப்படவேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஐடி விங்குக்குப் போட்டி போட்டு செயல்பட்டு வருகிறது. இப்போது திடீரென கட்சி சார்பற்ற, நடுநிலையாள பத்திரிகையாளர்கள் போல நடித்து அமைச்சரை அழைக்கிறார்கள் என்கிற காரணத்தாலும், அமைச்சர் வருவதற்கான தருணம் இதுவல்ல என்பதாலுமே நாம் அமைச்சருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஆயிற்று. இந்த மலிவான அரசியலுக்குள் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் ஆளாகிவிடக் கூடாது என்பதே எங்களது உள்ளார்ந்த கவலையாக இருந்தது. எங்களைப் போன்ற மூத்த பத்திரிகை ஊடகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வராமல் தவிர்த்த மாண்புமிகு அமைச்சருக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி கூறிக்கொள்கிறோம், தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம். 20/06/26 #imrajmohan #CMVijay‌ #TVKVijay‌ #chennaipressclub #tamiloodagam #TNTVTamilOodagam #tamiloodagamdotnet @CMOTamilnadu @rajmohan @tvkhq @chennaipressclub
2
10
216
TNTVNewsTamil
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna வெளியிட்ட ஒரு படத்தில் பின்புறத்தில் பெரியார் இராமசாமி படம் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டி ஒரு பதிவிட்டிருந்தோம். நேற்று எடுக்கப்பட்ட படத்தில் பின்புறம் காந்தி, அம்பேத்கர் காமராஜர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மகிழ்ச்சி, வாழ்த்துகள் -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் 20/06/26 #periyarramasamy #ambedkar
1
3
17
475
TNTVNewsTamil
இப்படிப்பட்ட நிலையில் அதே திமுக ஆதரவு ஊடக "விங்" நடத்தும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அதுவும் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பத்திரிகையாளர்களின் மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுப்பதற்காக தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் செல்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மகன்கள் மகள்கள் மட்டும்தான் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்களா ?! சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடங்கி அரசு நிறுவனமான CIJ எனும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் நிறுவனம் வரை திமுக ஆதரவு பத்திரிகை ஊடகர்கள் வசம் இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்வதை விடுத்து அழைத்தவுடனே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் செல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்த அழைப்பை நிராகரித்தால் அமைச்சர் ராஜ்மோகன் தமக்கான பத்திரிகை ஊடக விளம்பரம், வெளிச்சம் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சப்படுகிறாரா என்ன ? "திமுக அரசியல் எதிரி" என்று ஜோசப் விஜய் அவர்கள் சொன்னது சும்மா விளையாட்டுக்குதான் யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று திமுகவினருக்கு மறைமுகமாகச் சொல்லத்தான் இந்தத் திமுகவினர் நிகழ்வில் பங்கேற்கிறாரா அமைச்சர் ராஜ்மோகன் ?! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் 20/06/26 2/2.
2
3
114
TNTVNewsTamil
தமிழே உச்சரிக்கத் தெரியாத தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் !? திராவிட முகமூடிகளின் 54 ஆண்டு கால "சாதனை" தமிழ் வாழ்க என்று "உருட்டித்" தமிழை வாழவைத்த "லட்சணம்" ! --வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ் வாழ்க என்று ஊருக்கு ஊரு விளம்பரப் பலகை வைத்த திராவிட முகமூடிகள் - நாங்கள்தான் தமிழ்நாட்டு மக்களுக்குக் கல்வியே கொடுத்தோம் இல்லையெனில் தமிழர்கள் எழுதப் படிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பார்கள் - என்று மேடை தோறும் கதையளந்தவர்கள் கடந்த 54 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழை வாழவைத்த லட்சணம் இதோ இப்போது பல்லை இளிக்கிறது. ஒருபுறம் சாராய உற்பத்தி ஆலைகள் மற்றும் கடைகள் நடத்திகொண்டு மறுபுறம் கல்வி நிறுவனங்களை நடத்தும் "கல்வித் தந்தைகளாக" இத்தனை ஆண்டுகாலம் வலம் வந்த இந்தத் திராவிடத் "திருவாளர்கள்" உருவாக்கிய தமிழ்நாட்டுத் தலைமுறைகளுக்குத் தமிழே தள்ளாடுகிறது. தமிழில் வாசிக்க, எழுத, பேச முடியாத பல தலைமுறைகளை உருவாக்கிவிட்டுத் "தமிழ் வாழ்க" என்று கூச்ச நாச்சமில்லாமல் பேசுகிற இவர்கள் "தமிழின அ*ழிப்பாளர்கள்" இல்லாமல் வேறு யார் ? தமிழ்க் கோயில்களில் தமிழ் மட்டுமே முழங்கிய நிலையில் தெலுங்கு நாயக் மன்னர்கள் வருகைக்குப் பிறகே தெலுங்கு பிரமணர்கள் (பார்ப்பனர்கள்) கோயில்களுக்குள் நுழைக்கப்பட்டனர் என்கின்றன ஓலைச்சுவடிக் கதைப் பாடல் மற்றும் செப்புப் பட்டய ஆவணங்கள். அன்றிலிருந்து இன்றுவரை "தமிழர் இனவ*ழிப்பை" மிக மிக நுட்பமாக அணு அணுவாகச் செய்து வருகிறார்கள் இந்தப் பிறமொழித் திராவிட "முகமூடிகள்". வெளிப்படியாகவே தமிழையும், தமிழர்களையும் கேலி செய்கிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள். தமிழ்ப் பெரும் சோழ மன்னர்கள் குறித்து அவதூறு, பொய்களைப் பரப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியம் பேசுவோரைத் திட்டமிட்டுத் தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள். இவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் தமிழர் அல்லாத பிறமொழித் திராவிட முகமூடிகள், தமிழ் வாழ்க என்று கூறித் தமிழை, தமிழரைத் திட்டமிட்டு அழிப்பவர்கள். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், "ஆங்கிலமே அறிவு" என்றும் சாகும் வரை பரப்புரை செய்த பெரியார் இராமசாமியின் வகையறாக்கள்தான் "திராவிடம்" எனும் முகமூடியை மாட்டிக்கொண்டு 54 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தமிழை, தமிழரை அழிக்கும் திட்டமிட்ட கல்வி முறையை நடைமுறைப் படுத்தினார்கள். தமிழர் கல்வி முறை உலகிற்கே நல் ஒழுக்கம், வேளாண்மை, உற்பத்தி, வணிகம், அரசாட்சி, மருத்துவம், வானியல், வாழ்வியல் என மானுடத்திற்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஒரு கல்வி முறை. அதனை அழித்து ஒழித்து ஆங்கிலம்தான் அறிவு எனும் தவறான பொய்யான பரப்புரைகள் செய்து தமிழர்களை அழித்தொழிக்கும் சதிச் செயல்களைப் பெரியார் இராமசாமி காலத்திலிருந்து திராவிட முகமூடிகள் வரை செய்து வருவதன் விளைவே தமிழ்நாட்டில் தமிழே சரிவர உச்சரிக்க இயலாத ஒரு அமைச்சரை நாம் பார்க்க நேரிட்டதற்கான காரணம். இத்தனைக்கும் நிதி அமைச்சர் என். மேரி வில்சன் ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் நிதி அமைச்சர் தமிழ் பேசத் தடுமாறுகிறார், தெலுங்கர் பாலகிருஷ்ணன் சங்கத் தமிழ் பேசிக்கொண்டு திரிகிறார். பிறமொழித் திராவிட முகமூடிகள் தமிழர்களின் தாய்மொழியில் இருந்து தமிழர்களை வெளியேற்றிவிட்டு அவர்கள் தமிழ் பண்டிதர்கள் போல வந்து தமிழர் இலக்கியம், பண்பாடு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றித் தமிழர் இனவழிப்பைத் திட்டமிட்டு செய்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று. தமிழர்களே நீங்கள் தமிழை விட்டு விலகினால் நீங்கள் இந்த மண்ணை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் அல்லது இந்த மண்ணில் நிரந்தர அடிமைகளாகப் பிற மொழியாளர்களால் ஆளப்படுவீர்கள். -தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் 17/06/26 இணைய வலைதளப் பக்கம் : tamiloodagam.net
40
58
404
TNTVNewsTamil
திரைத்துறை தவிர எமது அரசியல் பயணத்திலும் துணை நின்ற மகாக் கலைஞன் அப்பா பாரதிராஜா மறைவு பேரிழப்பு - சீமான் #பாரதிராஜா #அஞ்சலி #சீமான் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #விசுவா #விசுவநாத்
7
19
160
TNTVNewsTamil
மண்வாசனை சினிமாவின் மாமேதை மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழ் ஊடகத்தின் கண்ணீர் அஞ்சலி தமிழ் சினிமா வரலாற்றில் சிலர் திரைப்படங்களை இயக்கியவர்கள். சிலர் திரைப்படத் துறையை மாற்றியவர்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கியவர்கள். அந்த அரிய பட்டியலில் முதன்மையான பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இன்று அவர் நம்மிடையே இல்லை என்ற செய்தி வெறும் ஒரு கலைஞரின் மறைவு அல்ல. அது ஒரு காலத்தின் முடிவு. ஒரு சிந்தனையின் நிறைவு. ஒரு மண்ணின் மணத்தை திரையில் பதிவு செய்த கலைஞனின் இறுதி அத்தியாயம். பாரதிராஜாவுக்கு முன் தமிழ் சினிமா பெரும்பாலும் ஸ்டுடியோக்களின் சுவர்களுக்குள் வாழ்ந்தது. ஆனால் அவர் கேமராவை கிராமங்களின் வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்றார். மண்ணின் வாசனையை, மக்களின் மொழியை, அவர்களின் வாழ்வியல் உணர்வுகளை வெள்ளித்திரையில் உயிர்ப்பித்தார். அவரது திரைப்படங்களில் கிராமம் ஒரு பின்னணி அல்ல; அது ஒரு கதாபாத்திரம். 16 வயதினிலே தொடங்கி முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, கருத்தம்மா என ஒவ்வொரு படமும் சமூகத்தின் பல பரிமாணங்களைப் பதிவு செய்த வரலாற்றுச் சான்றுகளாக அமைந்தன. தமிழ் சினிமாவுக்கு எண்ணற்ற நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. பல தலைமுறைகள் அவரிடம் இருந்து கற்றன. பல இயக்குநர்கள் அவரை முன்னுதாரணமாகக் கொண்டனர். பல ரசிகர்கள் அவரது படங்களில் தங்களது வாழ்க்கையைப் பார்த்தனர். ஒரு நல்ல திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது சமூகத்தின் கண்ணாடி என்ற உண்மையை தனது படைப்புகளால் நிரூபித்தவர் அவர். காதல், சாதி, பெண்ணியம், கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் என பல்வேறு பரிமாணங்களை துணிச்சலுடன் கையாண்டார். இன்று பாரதிராஜா இல்லை. ஆனால் அவரது கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்கின்றன. அவரது வசனங்கள் இன்னும் பேசப்படுகின்றன. அவரது காட்சிகள் இன்னும் நினைவுகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. காலம் கடந்து சென்றாலும் அவரது படைப்புகள் தமிழ் மக்களின் பண்பாட்டு நினைவகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றிருக்கும். மண்ணை நேசித்த மனிதர். மக்களைப் புரிந்துகொண்ட கலைஞர். தமிழ் சினிமாவை உலக அரங்கில் தனித்த அடையாளத்துடன் நிறுத்திய படைப்பாளர். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலால் மறைந்திருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கிய சினிமா மொழி என்றும் அழியாது. தமிழ் ஊடகம் சார்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். "மண்ணின் மணம் மறையாது; பாரதிராஜாவின் பெயரும் மறையாது." வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம், இணைய வலைதளப் பக்கம் : tamiloodagam.net #பாரதிராஜாமறைவு #ManVasanai #tamilcinema #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
18
32
245
TNTVNewsTamil
சொல்லப்படாத தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய உலகளாவிய பார்வையால் தமிழ்த் திரைப்படத் துறையை மாற்றியமைத்த பாரதிராஜாவின் மறைவு, தமிழர்களுக்குப் பேரிழப்பாகும். தமிழ்த் திரையுலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான அவரது மறைவிற்குத் 'தமிழக முற்போக்கு மக்கள் கட்சி' தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. சக்திவேல், தலைவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி. #பாரதிராஜாமறைவு #வீரவணக்கம் #தமிழகமுற்போக்குமக்கள்கட்சி #வழக்கறிஞர்சக்திவேல் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான்
7
20
139
TNTVNewsTamil
மேடை நாடக வடிவில் இருந்த தமிழ்த் திரைப்படங்களை கிராமத்துத் தெருக்களுக்குக் கொண்டு சென்ற தமிழ்த் திரையுலகத்தின் பிதாமகன். தமிழர் இனத்தின் தன்னிகரற்ற ஈடு இணையில்லாத திரைக் கலைஞன் எங்களின் பாரதிராஜாவே..... சென்று சற்று இளைப்பாறி மீண்டும் வாருங்கள் ! வீரவணக்கம் ! ❤️❤️❤️❤️❤️ #பாரதிராஜா #வீரவணக்கம் #தமிழியல்நடுவம் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #விசுவா #விசுவநாத்
20
45
336
TNTVNewsTamil
பெயர் ஒற்றுமையை வைத்து தொடர்பேயில்லாத ஒருவரைப் போதை மருந்துக் கடத்தல் "குற்றவாளியாக்கிய" ஊடகங்களின் மோசடியும், அயோக்கியத்தனமும். #JohnBritto #ED #Martin #LeemaRose #CharlesMartin #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான்
22
36
477
TNTVNewsTamil
பிரான்ஸ் நாட்டில் ஆர்வமுடன் தமிழ்த் தேர்வு எழுதக் குவியும் மாணவ மணிகள் நனவாகிய தமிழ்த் தேசியத் தலைவரின் தமிழ்ச் சோலைக் கல்விக் கனவு பிரான்ஸ், சுவிட்சர்லந்து உள்ளிட்ட நாடுகளில் அவரவர் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வசதியாக அந்த நாடுகளின் அரசுகள் பள்ளிகளுக்கு வாரா வாரம் சிறப்பு விடுமுறை அளிக்கின்றன. - தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் #பிரான்ஸ் #தமிழ்ச்சோலை #தமிழ்த்தேர்வு #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #விசுவா #விசுவநாத்
9
16
157