அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் வலிமையோடு எழுந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும், இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு, போர்க்குற்றம் குறித்து எந்தவித கடந்தகால நினைவும் தமிழர்கள் மனதில் இருக்கக் கூடாது. அதற்காக நீதி கேட்டு யாரும் போராடிவிடக் கூடாது என்கிற பல திட்டங்களோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் மஹிந்த ராஜபக்ச.
ஐநா மனித உரிமைகள் ஆணையமோ, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றமோ இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனவ*ழிப்பு குறித்து ஏதும் உறுதியான நடவடிக்கைளை எடுத்துவிட்டால் தன் குடும்பமே தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்கிற அச்சம் மஹிந்தவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
அதனால், தனது மகன் நாமல் ராஜபக்சவை அதிபராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மஹிந்த. அதன்மூலம் தனது குற்றங்களுக்கான தடயங்களை, சாட்சியங்களை அழித்து விட முடியும் என்று நம்புகிறார்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக அவரது நண்பர் தொல். திருமாவளவன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா ஆகியோரை வைத்து நாம் தமிழர் சீமானுக்கு எதிராக பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளும் ஒரு வேலையை ஒருபுறம் அரங்கேற்றுகிறார்.
மறுபுறம் ஹிந்து என். ராம் மற்றும் ராதா கிருஷ்ணன் போன்ற தனது நண்பர்கள் மூலமாக தமிழ்நாட்டில் வாழும் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தாய் நாடு திரும்ப மாட்டார்கள் என்று கனக்குப் போடுகிறார்.
ஏற்கனவே இலங்கை வடக்கில் தமிழர்களின் மக்கள் தொகை பெருமளவில் குறைந்து கிடக்கிறது. புலத்தில் வாழும் மக்களும் திரும்ப இயலாத நிலை உள்ளது.
எனவே நீதி கேட்கும் வாழும் சாட்சியங்களாக இந்தியாவில் - தமிழ்நாட்டில் உள்ள ஈ*ழத் தமிழர்களை இங்கேயே குடியமர்த்தி அவர்களின் ஈழ விடுதலை உணர்வுகளை மழுங்கடித்து அவர்களின் "தாய் நாடு" தேவையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதே ராஜபக்சவின் திட்டமாக இருக்க முடியும்.
அதன் ஒருபகுதியாகவே ஹிந்து ஆர்.கே. எனும் ராதாகிருஷ்ணன் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரும் வகையில் ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது.
ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஈ*ழத் தமிழர்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அளவுக்கு அந்நாடுகள் அவர்களை சமூகத் தளத்தில் உயர்த்தி வைத்திருக்கின்றன. கனடாவில் ஈ *ழத் தமிழர் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். ஆஸ்திரேலிய உலகக் கால்பந்து அணியில் ஒரு ஈ*ழத் தமிழர் விளையாடுகிறார். பல நாடுகளில் வணிகத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் ஈ*ழத் தமிழர்.
ஆனால், தமிழ்நாட்டில் அரிசி, வேட்டி, சட்டை, புடவை என "ரேஷன்" முறையில் வழங்கப்பட்டு, இன்னமும் "சட்டவிரோதக் குடியேறிகளாகவே" நடத்தப்பட்டு வரப்படுகிறார்கள். முகாம் எனும் பெயரில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய மண்ணிற்குச் சொந்தமில்லாத மொழியினரான நேபாள அகதிகளுக்கு இந்தியாவில் "அகதி" அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவு என்று அழைக்கப்படும் ஈ*ழத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இங்கே நடத்தப்படுகிறார்கள்.
இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் சொந்த மண்ணுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் பூர்வீக மண், காற்று, நீர் என கவுரமாக சொந்தக் காணிகள், உறவுகளுடன் வாழ வைக்கப்பட வேண்டுமா ?!
"இலங்கை ரத்னா" என்.ராம் மற்றும் ஆர்.கே. - ராதாகிருஷ்ணன் பதில் என்ன ?!
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே நிலத்திலும், புலத்திலும், உலகெங்கிலும் வாழும் ஈ*ழத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதும் அவர்களின் அடுத்த மிக முக்கியக் கோரிக்கை.
இதுகுறித்தெல்லாம் மஹிந்த ராஜபக்சவின் நண்பர்கள் ஏன் மூச்சே விடுவதில்லை.
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ஈ *ழத் தமிழர்களுக்கு ஆர்.கே. இந்தியக் குடியுரிமை கோருகிறார். என்.ராம் அதனை ஆதரிக்கிறார். மு.கஸ்டாலின் அதை இரசிக்கிறார்.
இதில் ஈ *ழத் தமிழர்கள் கோரும் விடுதலை எங்கே ?!
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம். 22/06/26.
#hinduram #frontlinerk #tamils #docu #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
2/2.