Filter
Exclude
Time range
-
Near
TNTVNewsTamil
மு. க. முத்துவுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன தொடர்பு ? சீமான் செய்த வரலாற்றுப் பிழை #seeman #tamildesiyam #tamiloodagam #valarmeyyarivaan
15
8
19
1,096
TNTVNewsTamil
புதிய இணைய இதழ் தொடங்கப்பட்டது | தவறாமல் வாசியுங்கள் தமிழ் ஊடகம் டாட் காம் tamiloodagam dot com #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
14
23
460
TNTVNewsTamil
கரும்பு*லிகளின் நினைவு நாளான ஜூலை 5 ம் தேதிக்கு முந்தைய நாள் இரவு நிகழ்ச்சியின் தேதியை இளையராஜா மாற்றாவிட்டால் போராட்டம் உறுதி பிரான்ஸ் நாட்டுத் தமிழர் அமைப்பினர் மீண்டும் எச்சரிக்கை. இளையராஜாவே திரும்பிப் போ எனும் பதாகைகள் இப்போதே வைப்பு #ilayaraaja #FranceConcert #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
15
24
477
TNTVNewsTamil
அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது வன்மத் தாக்குதல் ?! தவெக பெண் அமைச்சர்களின் "உள்ளடி அரசியல்" ! தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/post/previe… ================================= தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ================================= #keerthana #jagadeeswari #tvk #tamiloodagamdotcom #tntvtamiloodagam #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan
15
33
417
TNTVNewsTamil
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய கடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate) இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography) மாணவர் சேர்க்கைக்கான தேதி 27.06.2026 மாலை 05.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. -இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு #mgrfilminstitute #course #dateextended #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
6
7
145
TNTVNewsTamil
செய்தியாசிரியர் பெரியசாமி அவர்களுக்குத் தமிழ் ஊடகத்தின் புகழஞ்சலி ! தமிழ்நாடு பத்திரிகை ஊடக உலகின் அறிவார்ந்த செய்தி ஆசிரியர்களில் தலையாயவர் அவர். பெரியசாமி சர் என்றுதான் அவரை அனைவரும் அன்போடு அழைப்போம். தனது மனைவி, குழந்தைகள் தொடங்கி எல்லோரையும் "வாங்க போங்க" என்று அழைக்கும் வழக்கம் கொண்டவர். சுமார் ஆறு ஆண்டுகள் அவரோடு பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு கடுஞ்சொல் கூட அவரது வாயில் இருந்து வந்ததை நான் கேட்டதேயில்லை. அவரோடு மணிக்கணக்கில் பேசினாலும் கூட சலிப்புத் தட்டாது. அவ்வளவு சுவையாகப் பேசக்கூடியவர். செய்தித் துறையில் எம்மை வார்த்தெடுத்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் என்பதை விட எமது வீட்டின் மூத்தவர் போல நட்புறவிலும் இருந்தவர். கடும் கோபம் கொண்டு சண்டை போட்டு சில நாட்கள் பேசாமல் இருப்பார். பிறகு அப்படியொன்று நடந்ததே தெரியாமல் மீண்டும் பேசுவார். அவரது காலத்தில் அலைபேசி கிடையாது, இணையதளம் கிடையாது. ஆனால் அவர் ஒவ்வொரு நாடு குறித்தும், பெரு நகரங்கள் குறித்தும் பேசும்போதெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு நாம் கேட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு அத்தனை தகவல்களையும் நாக்கு நுனியில் வைத்திருப்பார். அவர் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். பல நேரங்களில் அவர் கோபமாகப் பேசுவது போலத் தோன்றும், ஆனால் அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும் அத்தனையும் நகைச்சுவை என்று. செய்திகளை தட்டச்சு செய்யமாட்டார். அவர் செய்திகளைச் சொல்லச் சொல்ல அதைத் தட்டச்சு செய்பவர் கேட்டு தட்டச்சு செய்வார். அப்படி அவர் செய்தி சொல்வது செய்தி அறை மட்டுமல்ல பக்கத்துக்கு அறைகளுக்கும் கேட்கும் அளவுக்கு சத்தமாக செய்திகளைச் சொல்வார். அதைக் கேட்கக் கேட்க செய்தி எழுதத் தெரியாதவர் கூட கற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்கும் அவரின் அந்தச் செய்தி சொல்லும் திறன். அவர் சென்னைக்கு வந்து பத்திரிகை உலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து சன் நியூஸ் செய்திப்பிரிவில் பணியாற்றி அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சிக்கு வந்த காலம் வரை நடைபெற்ற அவரது அனுபவங்களையெல்லாம் அவர் சொல்லும் விதமே கேட்பதற்கு மிகச் சுவையானதாக இருக்கும். மிக முக்கியமான செய்திகள் எல்லாம் இவரிடமே ஒப்படைக்கப்படும் அளவுக்கு அனுபவம், துல்லியம், பிழைகள் வராமல் செய்தி தருவது என்பதில் உணமையில் பெரியசாமி சர் ஒரு பல்கலைக் கழகம். தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவோர் மட்டுமே செய்தி ஆசிரியர்கள், செய்தி ஆளுமைகள் என்கிற மிகத் தவறான ஒரு புரிதல் மற்றும் நடைமுறை வந்த காலத்திற்குப் பிறகு பெரியசாமி சர் போன்ற செய்திப் பிதா மகன்களின் பெருமை இந்த உலகிற்குத் தெரியாமலேயே போயிற்று. இன்றைய செய்தித் தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு குறைந்தது 10 பிழைகள், தவறுகள் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் ஒரு Factual Error கூட இல்லாதிருக்கும் இவர் பொறுப்பு வகிக்கும் அந்த 8 மணி நேர shift. எமது முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார். ஆறுதலாக இருந்தார். இறுதிக் காலங்களில் தொடர்பற்றுப் போயிருந்தாலும் அவரது மற்றும் எமது கனவான தனி வார இதழ், மின்னணு ஊடகம் (Digital Media) என்று இன்றைய தமிழ் ஊடகத்தின் எமது வளர்ச்சிக்கு வித்தாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். பெரியசாமி சர் அவர்களின் இழப்பு செய்தித்துறைக்கே பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறது தமிழ் ஊடகம் குழுமம். -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம். தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம். 23/06/26 இணைய வலைதளம் : tamiloodagam.com #tribute #periyasamisir #news #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
5
7
194
TNTVNewsTamil
அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் வலிமையோடு எழுந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும், இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு, போர்க்குற்றம் குறித்து எந்தவித கடந்தகால நினைவும் தமிழர்கள் மனதில் இருக்கக் கூடாது. அதற்காக நீதி கேட்டு யாரும் போராடிவிடக் கூடாது என்கிற பல திட்டங்களோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் மஹிந்த ராஜபக்ச. ஐநா மனித உரிமைகள் ஆணையமோ, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றமோ இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனவ*ழிப்பு குறித்து ஏதும் உறுதியான நடவடிக்கைளை எடுத்துவிட்டால் தன் குடும்பமே தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்கிற அச்சம் மஹிந்தவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், தனது மகன் நாமல் ராஜபக்சவை அதிபராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மஹிந்த. அதன்மூலம் தனது குற்றங்களுக்கான தடயங்களை, சாட்சியங்களை அழித்து விட முடியும் என்று நம்புகிறார். எனவே, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக அவரது நண்பர் தொல். திருமாவளவன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா ஆகியோரை வைத்து நாம் தமிழர் சீமானுக்கு எதிராக பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளும் ஒரு வேலையை ஒருபுறம் அரங்கேற்றுகிறார். மறுபுறம் ஹிந்து என். ராம் மற்றும் ராதா கிருஷ்ணன் போன்ற தனது நண்பர்கள் மூலமாக தமிழ்நாட்டில் வாழும் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தாய் நாடு திரும்ப மாட்டார்கள் என்று கனக்குப் போடுகிறார். ஏற்கனவே இலங்கை வடக்கில் தமிழர்களின் மக்கள் தொகை பெருமளவில் குறைந்து கிடக்கிறது. புலத்தில் வாழும் மக்களும் திரும்ப இயலாத நிலை உள்ளது. எனவே நீதி கேட்கும் வாழும் சாட்சியங்களாக இந்தியாவில் - தமிழ்நாட்டில் உள்ள ஈ*ழத் தமிழர்களை இங்கேயே குடியமர்த்தி அவர்களின் ஈழ விடுதலை உணர்வுகளை மழுங்கடித்து அவர்களின் "தாய் நாடு" தேவையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதே ராஜபக்சவின் திட்டமாக இருக்க முடியும். அதன் ஒருபகுதியாகவே ஹிந்து ஆர்.கே. எனும் ராதாகிருஷ்ணன் ஈ*ழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரும் வகையில் ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஈ*ழத் தமிழர்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அளவுக்கு அந்நாடுகள் அவர்களை சமூகத் தளத்தில் உயர்த்தி வைத்திருக்கின்றன. கனடாவில் ஈ *ழத் தமிழர் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். ஆஸ்திரேலிய உலகக் கால்பந்து அணியில் ஒரு ஈ*ழத் தமிழர் விளையாடுகிறார். பல நாடுகளில் வணிகத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் ஈ*ழத் தமிழர். ஆனால், தமிழ்நாட்டில் அரிசி, வேட்டி, சட்டை, புடவை என "ரேஷன்" முறையில் வழங்கப்பட்டு, இன்னமும் "சட்டவிரோதக் குடியேறிகளாகவே" நடத்தப்பட்டு வரப்படுகிறார்கள். முகாம் எனும் பெயரில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய மண்ணிற்குச் சொந்தமில்லாத மொழியினரான நேபாள அகதிகளுக்கு இந்தியாவில் "அகதி" அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவு என்று அழைக்கப்படும் ஈ*ழத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இங்கே நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் சொந்த மண்ணுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் பூர்வீக மண், காற்று, நீர் என கவுரமாக சொந்தக் காணிகள், உறவுகளுடன் வாழ வைக்கப்பட வேண்டுமா ?! "இலங்கை ரத்னா" என்.ராம் மற்றும் ஆர்.கே. - ராதாகிருஷ்ணன் பதில் என்ன ?! பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே நிலத்திலும், புலத்திலும், உலகெங்கிலும் வாழும் ஈ*ழத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதும் அவர்களின் அடுத்த மிக முக்கியக் கோரிக்கை. இதுகுறித்தெல்லாம் மஹிந்த ராஜபக்சவின் நண்பர்கள் ஏன் மூச்சே விடுவதில்லை. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ஈ *ழத் தமிழர்களுக்கு ஆர்.கே. இந்தியக் குடியுரிமை கோருகிறார். என்.ராம் அதனை ஆதரிக்கிறார். மு.கஸ்டாலின் அதை இரசிக்கிறார். இதில் ஈ *ழத் தமிழர்கள் கோரும் விடுதலை எங்கே ?! தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம். 22/06/26. #hinduram #frontlinerk #tamils #docu #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan 2/2.
2
5
133
TNTVNewsTamil
தலைவர் பிறந்த நாட்களை ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஆக்கப் பூர்வமாகக் கொண்டாடி மக்களின் நன் மதிப்பைப் பெறுங்கள் தவெக அன்பர்களே ! #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #ntk #birthday #blooddonation @Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ
14
22
171
TNTVNewsTamil
மகிழ்ச்சியான செய்தி ! ❤️❤️❤️❤️❤️ தங்களின் பேராதரவுடன் 🙏🙏🙏 #tamiloodagam #TNTVTamilOodagam #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan #vishwaa #viswanaath
4
7
79
TNTVNewsTamil
இதுதான் இன்றைய மீடியா புர்ச்சி ! 😁 #தமிழ்ஊடகம் #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
1
4
17
156
TNTVNewsTamil
16 வயதுக்குக் கீழே "NO" சோசியல் மீடியா ! மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவை அடுத்து பிரிட்டன் நாடும் தடை போட்டது ! 16 வயதுக்குக் கீழானவர்களுக்கு டிக்டாக், யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் ஆகியவற்றை முழவதுமாகத் தடை செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா ! -தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் #socialmediaban #Britain #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
13
21
187
TNTVNewsTamil
தமிழ்நாடு அரசே ! கொடுமணல் அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட தொன்மப் பொருட்களுக்கென்று ஈரோட்டில் அருங்காட்சியகம் உருவாக்கு ! நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய நாட்டிற்கு இரும்பு "எஃகு" பொருட்கள் தயாரித்து ஏற்றமதி செய்த தமிழர்களின் இடம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொடுமணல். இங்கு பூமிக்கு அடியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் புதுச்சேரியிலும், பூமிக்கு மேலே கிடைக்கபெற்ற பொருட்கள் ஈரோடு தனியார் கல்வி நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களையெல்லாம் மீட்டு ஈரோட்டில் அருங்காட்சியகம் (Mueseum) அமைத்திட வலியுறுத்துகிறோம். தமிழர் தொன்மங்களை, பழம்பொருட்களைப் பாதுகாப்போம் ! தமிழர் வரலாற்றை தரணியெங்கும் எடுத்துச்செல்வோம் -தமிழியல் நடுவம் 12/6/26 தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் இணையதளப் பக்கம் : tamiloodagam.net #kodumanal #museum #archaeology #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
36
41
535
TNTVNewsTamil
#BREAKING சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படவில்லை : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார தகவல் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் இதனைத் தெரிவித்தார் ஜனாதிபதி அநுரகுமார - தமிழ் ஊடகம் : தனித்துவமான ஊடகம் 10/06/26 இணைய வலை தளம் : https://tamiloodagam net #sangheethsan #PTAArrest #Song #srilanka #SritharanSivanganamMP #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
6
15
197
TNTVNewsTamil
இயக்குநர் இமயம் மறைவுக்கு சிவகாசி சேயோன் கல்வி நிலையம் அஞ்சலி #bharathiraja #tribute #seyonacademy #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
5
12
114
TNTVNewsTamil
தென் மேற்கு சீமையில தேனி நகர் ஓரத்திலே... பாரதிராஜாவுக்கு வைரமுத்து பாடிய வாழ்த்துக் கவிதை #tribute #bharathiraja #vairamuthu #tamil #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
34
73
851
TNTVNewsTamil
மண்வாசனை சினிமாவின் மாமேதை மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழ் ஊடகத்தின் கண்ணீர் அஞ்சலி தமிழ் சினிமா வரலாற்றில் சிலர் திரைப்படங்களை இயக்கியவர்கள். சிலர் திரைப்படத் துறையை மாற்றியவர்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கியவர்கள். அந்த அரிய பட்டியலில் முதன்மையான பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இன்று அவர் நம்மிடையே இல்லை என்ற செய்தி வெறும் ஒரு கலைஞரின் மறைவு அல்ல. அது ஒரு காலத்தின் முடிவு. ஒரு சிந்தனையின் நிறைவு. ஒரு மண்ணின் மணத்தை திரையில் பதிவு செய்த கலைஞனின் இறுதி அத்தியாயம். பாரதிராஜாவுக்கு முன் தமிழ் சினிமா பெரும்பாலும் ஸ்டுடியோக்களின் சுவர்களுக்குள் வாழ்ந்தது. ஆனால் அவர் கேமராவை கிராமங்களின் வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்றார். மண்ணின் வாசனையை, மக்களின் மொழியை, அவர்களின் வாழ்வியல் உணர்வுகளை வெள்ளித்திரையில் உயிர்ப்பித்தார். அவரது திரைப்படங்களில் கிராமம் ஒரு பின்னணி அல்ல; அது ஒரு கதாபாத்திரம். 16 வயதினிலே தொடங்கி முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, கருத்தம்மா என ஒவ்வொரு படமும் சமூகத்தின் பல பரிமாணங்களைப் பதிவு செய்த வரலாற்றுச் சான்றுகளாக அமைந்தன. தமிழ் சினிமாவுக்கு எண்ணற்ற நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. பல தலைமுறைகள் அவரிடம் இருந்து கற்றன. பல இயக்குநர்கள் அவரை முன்னுதாரணமாகக் கொண்டனர். பல ரசிகர்கள் அவரது படங்களில் தங்களது வாழ்க்கையைப் பார்த்தனர். ஒரு நல்ல திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது சமூகத்தின் கண்ணாடி என்ற உண்மையை தனது படைப்புகளால் நிரூபித்தவர் அவர். காதல், சாதி, பெண்ணியம், கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் என பல்வேறு பரிமாணங்களை துணிச்சலுடன் கையாண்டார். இன்று பாரதிராஜா இல்லை. ஆனால் அவரது கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்கின்றன. அவரது வசனங்கள் இன்னும் பேசப்படுகின்றன. அவரது காட்சிகள் இன்னும் நினைவுகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. காலம் கடந்து சென்றாலும் அவரது படைப்புகள் தமிழ் மக்களின் பண்பாட்டு நினைவகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றிருக்கும். மண்ணை நேசித்த மனிதர். மக்களைப் புரிந்துகொண்ட கலைஞர். தமிழ் சினிமாவை உலக அரங்கில் தனித்த அடையாளத்துடன் நிறுத்திய படைப்பாளர். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலால் மறைந்திருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கிய சினிமா மொழி என்றும் அழியாது. தமிழ் ஊடகம் சார்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். "மண்ணின் மணம் மறையாது; பாரதிராஜாவின் பெயரும் மறையாது." வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம், இணைய வலைதளப் பக்கம் : tamiloodagam.net #பாரதிராஜாமறைவு #ManVasanai #tamilcinema #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
18
32
245
TNTVNewsTamil
இலங்கை அரசே பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப் பட்ட இளம் பாடகர் சங்கீத்சனை விடுவி தமிழர்களை அழிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு ! பாடகர் வேடன் மற்றும் அமைச்சர் வன்னி அரசு கூட்டாக வலியுறுத்தல். #ReleaseSangheethsan #sangheethsanganeshkumar #hiphopsanghee #ptaarrest #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
3
7
144
TNTVNewsTamil
பாடல் பாடியதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்ய வேண்டும் - பாடகர் வேடன் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் - தமிழ் நாடு அமைச்சர் வன்னியரசு #ReleaseSangheethsan #sangheethsanganeshkumar #hiphopsanghee #ptaarrest #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
2
10
108
TNTVNewsTamil
@CMOTamilnadu @TANGEDCO_Offcl மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே ! மின்சாரத்தின் தேவை குறித்து பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களின் லட்சோப லட்சம் ரசிகர்களுக்குத் தொண்டர்களுக்குத் தெரியும். அலைபேசியிலேயே அரசியல் மாற்றம் கொண்டு வந்த உங்களின் ஒரு கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் போல மின்சாரத்தை அத்தியாவசியத் தேவை ஆக்கிவிட்டது இந்தப் புதிய உலகம். இதனைத் தங்கு தடடையின்றித் தர வேண்டியதுதான் ஒரு மக்களால் தேர்தெடுக்கபப்ட்ட அரசாங்கத்தின் கடமை. தங்களின் ஆட்சி வந்ததற்குப் பிறகு மிக மிக அதிகரித்துள்ள மின்வெட்டு குறித்த மக்களின் புலம்பல் தங்களின் காதுகளுக்குக் கேட்காமல் போனதற்குக் காரணம் "ரீல்ஸ்" போடக் கூட அலைபேசிகளுக்கு மின்சாரம் இல்லாத நிலையாகக் கூட இருக்கலாம். இந்தப் பதிவு போடும்போதே இரண்டு முறை மின்வெட்டு நடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் அதிபட்சமாக 15 முறை மின்வெட்டு ஆகிறது. Work From Home எனும் அடிப்படையில் லட்சக் கணக்கானோர் வீடுகளிலிருந்து கணினி - இணையதளம் மூலம் பணியாற்றுகிறார்கள், உங்களுக்கு வாக்களித்த "ஐடி துறைப்" பணியாளர்கள். அவர்களுக்கும் இந்த மின்வெட்டு பெருத்த பாதிப்புதான். சிறு, குறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், வேளாண்மை உள்ளிட்ட மின்சாரத்தை சார்ந்திருக்கும் அத்தனை துறைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம் இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் அளவுக்கு அழைத்துக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில்கள் நகைச்சுவையாக இருக்கின்றன. "சார்...நீங்க எங்கிருந்து பேசுறீங்க ? சந்தைப்பேட்டைக்கு எதிர்ல இருந்து பேசுறோம். அப்படியா...அங்க இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லையே...ட்ரிப் ஆகலை, பியூஸ் போகலை. ஒருவேளை உங்க வீட்டுல ஏதும் பியூஸ் போயிருக்குமோ " என்கிறார். சார்...எங்க ஊர்லயே காலைல இருந்து இந்த நிலைமைதான் என்று நாம் பொறுமையாகச் சொல்ல ... இல்லையே சார்...காலைல இருந்து கரண்ட் ட்ரிப் ஆகலை, பியூஸ் போகலை...என்கிற அதே வாழைப்பழக் கதையை கூறி காதில் பூ சுற்றுகிறார்கள் உங்கள் மின்வாரிய அதிகாரிகள். மற்றொரு முறை அழைத்து "சார் காலைல இருந்து 15 தடவை மின்சாரம் போய் வருகிறது என்கிறோம். அதற்கு அவர் "சார் வாய்ப்பே இல்ல. இங்க எங்களோட டேட்டா படி அப்படி மின்சாரம் போகலை. ஒருவேளை உங்க வீட்டுல அலலது உங்க ட்ரான்ஸபார்மர்ல அப்படி ஆகி இருக்கலாம்" என்று மறுபடியும் மக்களை, வாடிக்கையாளர்களைப் பைத்தியமாக்குகிறார்கள் உங்கள் மின்வாரிய அதிகாரிகள் முதலமைச்சர் அவர்களே. உங்க வீட்டுக்கு நிச்சயம் மின்வெட்டு இருக்காது. அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்னை தெரிய வாய்ப்பில்லை. உங்க அமைச்சர்கள் பியூஸ் கட்டையை யாரோ பிடுங்குகிறார்கள் என்று 8 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு கதையை அளந்து கொண்டிருக்கிறார்கள். தூய ஆட்சி தாருங்கள் வரவேற்கிறோம். அதற்காக இருண்ட ஆட்சியைக் கொடுத்தால் என்ன செய்வது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...! 200 யூனிட் மின்சாரக் கட்டணம் இல்லைதான்...ஆனால் மின்சாரம் வேண்டுமே ! ரீல்ஸ் போட்டாவது இதயெல்லாம் சொல்லலாம் என்றால் அதற்கும் மின்சாரம் இல்லையே முதலமைச்சரே ! --மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ்நாட்டு வாக்களரில் ஒருவன் தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் இணையம் : https//:tamiloodagam.net #powercut #tangedco #tneb #cmvijay #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #தமிழ்ஊடகம் 10/06/26
12
14
155
TNTVNewsTamil
சீக்கிரம் முதலமைச்சர் அவர்களே 🙏🙏🙏 #powercut #tneb #sufferingpublic #poorgovernance #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
19
32
266