🦉கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரைகுறை அறிவுஜீவிகளின் ஆலோசனையைக் கேட்டு அவசரகதியில் தவெக அரசு எடுத்த தவறான முடிவால்தான் இன்று ஒரு விவசாயியின் உயிர் பறிபோயுள்ளது என்று சாடியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் இந்த போராட்டத்தை "சிலரின் தூண்டுதல்" என்று குறிப்பிட்டதை விமர்சித்துள்ள அவர், எதிர்க்கட்சிகளை எதிரிகளாகப் பார்க்காமல் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, தேர்தலுக்கு முன்பாகக் கொடுத்த வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
#AanthaiReporter #TTVDhinakaran #JosephVijay #TVKGovernment #FarmersProtest #TamilNaduPolitics #ஆந்தைரிப்போர்ட்டர் #டிடிவிதினகரன் #ஜோசப்விஜய் #தவெகஅரசு #விவசாயிகள்போராட்டம் #தமிழகஅரசியல்
4
















