திருவள்ளூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் செய்யப்பட்டு வரும் பல்வேறு சங்கங்கள், இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் எனது தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல், தங்குமிட வசதிகள், சுகாதார சேவைகள், குழந்தைகளின் கல்வி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், தொழிலாளர் உரிமைகள், அண்மையில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு போன்ற தொழிற்சாலை பாதுகாப்பு விவகாரங்கள், குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கலந்தாய்வில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தொகுத்து, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உறுதியும் அளித்தேன்.
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலனை உறுதி செய்வதற்கான தொடர் செயல்பாடுகள் இதுபோன்ற கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் அனைவரது கூட்டு முயற்சியாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
கூட்டத்தில் மேலும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு.சசிகுமார்
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு. சிதம்பரம் மற்றும் INTUC, TNSF (Tamilnadu State Science Forum), இந்திய தொழிற்சங்க மையம் சி ஐ டி யு, AITUC, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம்,AICCTU, UTUC ஆகிய அனைத்து தொழிற்சங்கங்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.